22 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு கணக்காய்வு அவதானிப்பு குறித்த பட்டறை

கணக்காய்வு அவதானிப்புகளைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை 22 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஜூன் 26 முதல் 2025 ஜூன் 29 வரை நடாத்தப்பட்டது.

இந்தப் பட்டறையில் 11 அதிகாரிகள் மற்றும் 64 சிப்பாய்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் மற்றும் படையினரின் கணக்காய்வு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தினால் இந்த பட்டறை நடாத்தப்பட்டது.