22 வது காலாட் படைப்பிரிவின் 28 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

22 வது காலாட் படைப்பிரிவு, அதன் 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி அதன் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

வருகை தந்த தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு வழங்கப்பட்டது.