2025 உலக தூய்மைப்படுத்தும் தினத்தில் இலங்கை இராணுவத்தினர் உலகளாவிய முயற்சிகளில் இணைவு

ஆடை மாசுபாட்டின் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக பொறுப்பான நுகர்வை ஊக்குவிப்பதையும் கழிவு முகாமைத்துவ அமைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ’ஆடை மற்றும் அலங்கார கழிவுகளை சமாளித்தல்’ என்ற தொனிப் பொருளில் 2025செப்டம்பர் 20 ஆம் திகதி கொண்டாடப்பட்ட 'உலக தூய்மைப்படுத்தல் தினம் 2025' க்கு இலங்கை இராணுவத்தினர் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர்.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'தூய இலங்கை திட்டத்திக்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இராணுவ வீரர்கள் முகாம் வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியான சுத்தம் செய்தலை மேற்கொண்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கான இராணுவத்தின் வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில், நாடு தழுவிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

படையினர் முதலில் தினசரி குப்பைகள் குவியும் பகுதிகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தியதுடன் கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம் செய்வதை உறுதி செய்தனர்.

இராணுவ தளங்களுக்கு அப்பால் சுற்றியுள்ள பொது இடங்களுக்கு தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலம், உள்நாட்டு சமூகங்களுக்கு தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு இராணுவ படையினர் பங்களித்தனர்.