5th September 2025
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இடைநிலை குத்துச்சண்டை போட்டி - 2025, கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் 2025 ஆகஸ்ட் 18 முதல் 21 வரை இடம்பெற்றது. இப்போட்டியில் 20 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 85 ஆண் மற்றும் 36 பெண் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இராணுவ ஆண்கள் அணி 10 எடைப் பிரிவுகளில் 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று சிறந்து விளங்கியதுடன், இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்தது.
அதே நேரத்தில், 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஎச்ஐ விராஜனி 54 கிலோவுக்குக் குறைவான பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று சிறந்த பெண் தடகள வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.