19th May 2025
2569 புத்த வருடத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா மே 10 ஆம் திகதி நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மூன்று மஹா நாயக்க தேரர்களின் தலைமையில் ஆரம்பமானது.
“பஜெத மித்தே கல்யாண – பஜெத புரிசுத்தமே” (நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்) எனும் தொனிப்பெருளின் நடைபெறும் இந்த விழா மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும்.
பல அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன், மஹா சங்கத்தின் வழிகாட்டுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், தொடர்ச்சியான மத நிகழ்ச்சிகளும் "தூய இலங்கை" திட்டத்தின் கீழ் முப்படையின் ஆதரவுடன் விகாரையில் மேம்பாட்டுப் பணிகளும் அடங்கும்.
கொத்மலை மலியதேவ புராண ராஜ மஹா விஹாரையும் குருநாகல் ஸ்ரீ விஷ்ணு விகாரையும் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க மதத் தளங்களாக அறிவிக்கும் 'ஸ்ரீ சன்னாஸ் பத்ரா'வின் அதிகாரப்பூர்வ விளக்கக்காட்சி மற்றும் வெசாக் நினைவு முத்திரை வெளியிடுதல் ஆகியவை இந்த நிகழ்வில் அடங்கும்.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
மத நல்லிணக்கம் மற்றும் சர்வதேச பௌத்த உறவுகளை வலியுறுத்தும் நிகழ்வில் மதகுருமார்கள், அரச தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், முப்படை வீரர்கள் மற்றும் சர்வதேச விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
(படம் மற்றும் கட்டுரை: www.presidentsoffice.gov.lk)