16 வது தேசிய போர்வீரர் தின நினைவேந்தல்

16 வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் புலிகளின் பயங்கரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் உச்சபட்ச தியாகத்தைச் செய்த முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த போர் வீரர்களின் மரியாதைக்குரிய நினைவுகள், அவர்களின் வீரம், துணிச்சல், தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற தியாகங்களுக்காக மரியாதையுடன் நினைவு கூர்ந்தனர்.

மதகுருமார்கள், வீரமரணமடைந்த போர் வீரர்களின் அன்புக்குரிய துணைவியர்கள் மற்றும் உறவினர்கள், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, அட்மிரல் பிலீட் வசந்த கரன்னாகொட, மார்ஷல் ஆப் தி ஏயார்போர்ஸ் ரோஷன் குணதிலக்க, பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் முப்படைத் தளபதிகள், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், முப்படை வீரர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் மற்றும் போர் வீரர்கள் அந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கூடியிருந்தனர்.

ரணவிரு சேவா அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புனித நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல், மத அனுஸ்டனங்கள், விழிப்புணர்வு ஊர்வலம், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், துணிச்சலான வீரத்திற்கான 'ரணபெர' இசைத்தல், மலர் அஞ்சலி செலுத்துதல், இருதி வாசிப்பு மற்றும் ரீவில்லி ஒலித்தல் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை இடம்பெற்றன.

இந்நாளுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், அனைத்து சிறப்பு விருந்தினர்களும், வீரமரணமடைந்த அனைத்து போர் வீரர்களின் உறவினர்களின் பிரதிநிதி கூட்டத்தில் கலந்து கொண்டு நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இது அன்றைய நினைவு நிகழ்வின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது.

மாலையில், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய லாஸ்ட் போஸ்ட் மற்றும் ரீவில்லி ஒலித்தலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

(புகைப்படம்: www.presidentsoffice.gov.lk)