7th July 2025
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை 2025 ஜூலை 04 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் உட்பட 125 இராணுவ வீரர்களைக் கொண்ட படைக்குழுவின் இரண்டாம் கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் பி.எம்.ஏ.ஐ.யூ ஒபயசேன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பணியாற்றுகிறார்.
அந்த குழுவின் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் போதைப்பொருள், வெடிபொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற நான்கு மோப்ப நாய்களும் இக் கழுவில் அடங்குகின்றன.
நகோரா லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்திற்கான பாதுகாப்பை வழங்குவதற்கும், தேவைக்கேற்ப முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு கடமைகளை வழங்குவதற்கும் இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.