22nd July 2025
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதன் பின்னர், 2025 ஜூலை 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இராக்காவல், விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் மற்றும் சுதந்திர நடமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தோனேசிய பாதுகாப்பு படை குழு மற்றும் மலேசியப் படையலகுகலுடன் இணைந்து, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதன வெடிப்பைத் தொடர்ந்து, பதுங்கியிருந்து இராக்காவல், விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் மற்றும் சுதந்திர நடமாற்றம் போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டன.
02 அதிகாரிகள் மற்றும் 16 சிப்பாய்களை கொண்ட இலங்கை அமைதி காக்கும் படையினர், இரண்டு கவச வாகனங்களுடன் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.