31st July 2025
இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட குழுவால் 10வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 10வது இராணுவ கைப்பந்தாட்ட போட்டி, 2025 ஜூலை 24-27, வரை பனாகொடை இராணுவ உள்ளக மைதானத்தில், இலங்கை இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 192 ஆண் மற்றும் பெண் வீரர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
படையணிகளுக்கு இடையிலான கைப்பந்தாட்ட இறுதிப் போட்டி 2025 ஜூலை 27ம் திகதி நடைபெற்றது, நினழ்வில் 56வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியும், இராணுவ கைப்பந்து குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இலங்கை கைப்பந்து சங்கத்தின் தலைவர் திரு. உபாலி ராஜபக்ஷ கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி அணி 26 புள்ளிகளைப் பெற்று சாம்பியன்ஷிப்பை வென்றது, அதே நேரத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி அணி 14 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டன.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், இலங்கை இராணுவ சிங்க படையணி அணி 34 புள்ளிகளைப் பெற்று சாம்பியன்ஷிப்பை வென்றது, அதே நேரத்தில் இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி அணி 29 புள்ளிகளைப் பெற்று போட்டியின் இரண்டாம் இடத்தை பிடித்தது.
இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சங்க தலைவர் திரு. உபாலி ராஜபக்ஷ ஆகியோர் வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்தப் போட்டியைக் காண ஏராளமான சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் சிறந்த வீரர்களின் விபரம்:
• சிறந்த வீரர் (ஆண்): இலங்கை சிங்க படையணியின் கோப்ரல் எம்எம்என்எஸ் அதிகாரி
• சிறந்த வீராங்கனை இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிப்பாய் எஸ்ஏஎஸ்எம் பெரேரா
• சிறந்த பந்து தடுப்பாளர் (ஆண்): இலங்கை சிங்க படையணியின் கோப்ரல் எம்டபிள்யூஏபீ வீரசிங்க
• சிறந்த பந்து தடுப்பாளர் (பெண்): இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் இஎம்என்எஸ் பண்டார