இராணுவ சிறப்பம்சம்
இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கேணல் டி.ஜி.என். டி சில்வா அவர்கள் பனாகொடை இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தில் 2025 ஜனவரி 01 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது அதன் 14 வது பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.
எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதி கடமை ஏற்பு
லெப்டினன் கேணல் டிஎம்சீஎல் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 01 அன்று சுருக்கமான நிகழ்வின் போது எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 50 நிறைவு
துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.50 தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் 13 நவம்பர் 2024 முதல் 30 டிசம்பர் 2024 வரை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. 06 அதிகாரிகள் மற்றும் 28 சிப்பாய்கள் பாடநெறியை பின்பற்றினர்.
இராணுவ தலைமையகத்தில் புதிய இராணுவ செயலாளர் கடமை பொறுப்பேற்பு
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 01 ஜனவரி 2025 அன்று இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவப் போர்க் கல்லூரியின் 3 வது ஆண்டு நிறைவு விழா
The Army War College (AWC) in Buttala celebrated its 3rd Anniversary on 17 December 2024.
51 வது படைப்பிரிவு தளபதி 511 வது பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம்
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 30 டிசம்பர் 2024 அன்று 511 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு
இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி 29 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.
பொறியியல் சேவைகள் படையணியினால் போதைப்பொருள் தடுப்பு பற்றிய விரிவுரை
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் சேவைகள் படையணி 26 டிசம்பர் 2024 அன்று போதைப்பொருள் தடுப்பு பற்றிய விரிவுரையை நடாத்தியது. இராணுவத்தினரிடம் போதைப்பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கொழும்பு மாவட்டத்திற்கான தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாளர் திருமதி துல்ஷானி தாரக மஹானாம அவர்கள் விரிவுரையை நடாத்தியதுடன், இலங்கையில் போதைப்பொருள் பாவனையை எதிர்ப்பதற்கான சவால்கள் குறித்த பெறுமதியான நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
பசுமை கட்டிட விருதுகளில் 14 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விருது
இலங்கையின் பசுமைக் கட்டிட சபை ஏற்பாடு செய்திருந்த 13 வது வருடாந்த பசுமைக் கட்டிட விருது வழங்கும் விழா 19 டிசம்பர் 2024 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கையின் பசுமைக் கட்டிட சபையில், நிபுணத்துவப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தத 14 பொறியியல் சேவைகள் படையணியை சேர்ந்த அதிகாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் இந்த சாதனை மூலம் இலங்கையின் பசுமைக் கட்டிட சபையின் நிபுணர்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
591 வது காலாட் பிரிகேட்டின் 17 வது ஆண்டு நிறைவு விழா
591 வது காலாட் பிரிகேட் அதன் 17 வது ஆண்டு நிறைவு விழாவை 13 டிசம்பர் 2024 அன்று 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.ஜே. உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு நாளில், கிரிக்கெட் போட்டி மற்றும் கோவில் ஆசீர்வாத பூஜை ஆகியவற்றை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் வளாகத்தில் போதி பூஜையும் இடம்பெற்றது.