முன்மாதிரியான சேவைக்கு கெளரவம்

21st January 2021

முப்பது வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியாக சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் தளபதி மேஜர் ஜெனரால் அதீப திலகரட்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வாவின் அலுவலகத்துக்கு நேற்று (20) அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரால் அதீப திலகரட்னவின் அர்பணிப்பான சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்த இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்தி விளங்கினீர்கள் என்றும், உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் திறம்பட நிறைவுசெய்யப்பட்டிருந்தால் அவை உங்களுடைய சக தரத்தினரின் திருப்திக்கு வழி செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் உங்களிடத்தில் நேர்மை, மனிதாபிமானம் என்பனவும் உயர்வாக காணப்பட்டது என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அண்மையில் நிறுவப்பட்ட ட்ரோன் படையணி,மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் துறையில் வாகன பதிவு நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற செயற்பாடுகளை நினைவு கூர்ந்த இராணுவ தளபதி மேஜர் ஜெனரால் அதீப திலகரட்னவின் உண்மையான அர்ப்பணிப்புக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இராணுவ சமிக்ஞை படையணியின் தளபதியாக நாட்டிற்கு நலன் கிடைப்பதை கருத்தில் கொண்டு செயற்பட்டதை நினைவு கூர்ந்த இராணுவ தளபதி அவருடைய எதிர்காலச் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் நிறைவில் ஜெனரால் ஷவேந்திர சில்வா சிவில் வாழ்க்கைக்கு திரும்பிய பின்னர் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் பற்றி வினவியதுடன் நினைவுச் சின்னம் ஒன்றிணையும் வழங்கி வைத்தார்.

பதிலுக்கு மேஜர் மேஜர் ஜெனரால் அதீப திலகரட்ன, இராணுவ தளபதிக்கு கிடைத்த பாராட்டுக்களை நினைவுக்கூறும் வகையிலான ஒலிப்பதிவு கருவியொன்றை இராணுவ தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வாவிற்கு வழங்கியதுடன் இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் தனக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார். |