சுதந்திர நிகழ்வுகள் தொடர்பான மாநாடு

20th January 2021

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வுகள் பற்றிய மாநாடு இன்று (20) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரால் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அரச சேவைகள்,மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அரச அதிகாரிகள், ஊடக தலைவர்கள் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுதந்திர தின நிகழ்வுகளை எவ்வாறு நடத்தலாம் என்பது தொடர்பாக மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது.

அதன்படி அணிவகுப்பின் அமைப்பு, முப்படை, சிவில் பாதுகாப்பு படை மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்கேற்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது. |