மின்னேரியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'மிரிடிய பவன ’விடுமுறை விடுதி இராணுவத் தளபதியினால் திறந்து வைப்பு
10th January 2021
இலங்கை சமிக்ஞை படையணியினது மினேரியாவில் புதிதாக கட்டப்பட்ட அதன் 'மிரிடிய பவன ’விடுமுறை விடுதியினை சனிக்கிழமை (9) சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து திறந்து வைத்தது.
இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களின் அழைப்பினை ஏற்று பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு பதவு நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள புதிய கட்டுமானத்தை திறந்து வைத்தார்.
மின்னேரியா குளத்தின் அருகில் ஒரு அழகிய அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும் குறித்த விடுதியானது மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களின் நெருங்கிய வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் இலங்கை சமிக்ஞை படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அன்றைய பிரதம அதிதியை வரவேற்ற பின்னர் நிகழ்வானது மகா சங்க உறுப்பினர்களால் ‘சேத் பிரித்’ நிகழ்வுகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்டது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நல்ல நிமிடத்தில் ஒரு நாடாவை வெட்டி, ‘மிரிடிய பவன’ விடுதியை திறந்து வைத்தார்.பின்னர் அன்றைய பிரதம அதிதி விடுதியை பார்வையிட்டதோடு அதனை நிர்மாணித்த படையினர் மத்தியிலும் பேசினார். இதேபோல், பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் சுற்றுப்புறங்களை ஆர்வத்துடன் பார்த்து, அந்கு கலந்து கொண்டவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நினைவகத்தின் அடையாளமாக வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நட்டார்.
குறித்த நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, தலைமை சமிக்ஞை அதிகாரி தலைமைத் தளபதி மேஜர் ஜெலை அதீப திலகரத்ன, தொழில்நுட்ப பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ்,கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைப் பிரதேச தளபதி பிரிகேடியர் அத்துல அரியரத்ன, மின்னேரியா தகவல் பயிற்சி மைய தளபதி பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன, சமிக்ஞை பிரிகேட் தளபதி பிரிகேடியர் லலித் பிரேமசிறி, அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர் |