புதிய மேஜர் ஜெனரல்களுக்கு சின்னம் அணிவிப்பு

1st January 2021

2021 புத்தாண்டு முதல் வேலை நாளில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் நிலையுயர்த்தப்பட்ட மேலும் ஐந்து சிரேஸ்ட பிரிகேடியர்களுக்கு தனது அலுவலகத்தில் மேஜர் ஜெனரல் சின்னங்களை அணிவித்தார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் முப்படை சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்‌ஷ அவர்களினால் மேலும் ஐந்து சிரேஸ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

59 வது படைப்பிரிவு தளபதி இலங்கை பீரங்கி படையின் பிரிகேடியர் மனோஜ் லமஹேவா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி இலங்கை பீரங்கியைச் சேர்ந்த பிரிகேடியர் அஜித் திசாநாயக்க, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி கஜபா படையின் பிரிகேடியர் தம்மி ஹெவகே, உளவியல் பணிப்பக பணிப்பாளர் இலங்கை பீரங்கி படையின் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன இராணுவ தலைமையக பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கெமுனு ஹேவா படையின் பிரிகேடியர் லால் சந்திரசிரி ஆகியோர் தங்களது புதிய நிலைக்கான சின்னங்களை ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் பெற்றுக்கொண்டனர்.

அவர்களின் புதிய நிலைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். |