மல்லாவியில் படையினரால் ஒரு மகன் காப்பாற்றப்பட்டதோடு இறந்த நிலையில் மூவரின் உடல்கள் மீட்பு

20th December 2020

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 652 வது பிரிகேட் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 3 வது கொமான்டோ படையணியின் படையினர் சனிக்கிழமை 19 ஆம் திகதி மாலை மல்லாவி பகுதியிலுள்ள வவுனிக்குளம் குளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை காப்பாற்றியதோடு, மூன்று சடலங்களை மீட்டெடுத்தனர். குறித்த குடும்ப உறுப்பினர்கள் பயணித்த பொலிரோ கெப் வாகனம் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

பொலிஸாரின் தகவலின் பிரகாரம், குறித்த குடும்ப உறுப்பினர்கள் சுற்றுலா பயணத்தின் போது அந்த குளத்திற்கு சென்றனர். அந்த பகுதியில் மழை பெய்ததால் குளத்தின் நீர் மட்ட அளவு உயர்வடைந்ததன் காரணமாக வாகனம் சறுக்கி குளத்தில் கவிழ்ந்தது.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 652 வது பிரிகேட் தளபதி தனது படையினருடன் குறித்த இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நீரில் மிதந்து கிடந்த நபரை காப்பாற்றினார். இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் படையினர் மேலும் மூன்று சடலங்களை மீட்டனர். அவர்களில் தந்தை, மகள் மற்றும் ஒரு சிறுவனும் உள்ளடங்குவர். மனிதாபிமான தேடுதல் நடவடிக்கையின் போது படையினரால் மரணித்த தகப்பனின் மகனை மாத்திரம் காப்பாற்ற முடிந்தது.

பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன. |