அதிகாரவாணைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான நிலை சின்னம் அணிவிப்பு

20th December 2020

அதிமேதகு ஜனாதிபதியினால் அதிகாரவாணைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான நிலை சின்ன அணிவிப்பு நிகழ்வானது இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன இலங்கை நற்புறவு கேட்போர் கூடத்தில் இன்று 18 ஆம் திகதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.

சீன இலங்கை நற்புறவு கேட்போர் கூடத்தில் வெவ்வேறாக நடைபெற்ற நிகழ்வில் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதிய பட்டதாரி அதிகாரவாணைபெற்ற அதிகாரிகளுக்காக அணிவிக்கப்படும் சின்னத்தினை அணிவித்தார். சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த நிகழ்வில் பங்குபற்றல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இராணுவத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இளம் அதிகாரிகளுக்கான நிலைச் சின்னத்தினை அணிவித்து வைத்ததோடு அவர்களை வாழத்தினர்.குறித்த நிகழ்வில் 184 இலங்கை அதிகாரிகள் மற்றும் 3 வெளிநாட்டு அதிகாரிகளுக்கு (1 மாலைதீவு மற்றும் 2 ஷெம்பியன்) நிலை சின்னம் அணிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் அதிகாரவாணைபெற்ற அதிகாரிகளின் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு நிலைச் சின்னத்தினை அணிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, இம்முறை கொவிட்-19 தொற்றுநோய் சுகாதார வழிகாட்டுதல்கள் பிரகாரம் அது தடைசெய்யப்பட்டது. |