தியதலாவாவில் புதிய இராணுவ சேவை வனிதையர் நலன்புரி கடை கட்டுமானம் ஆராய்வு
18th December 2020
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் ஒன்றான பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர் தம் பாரியார் திருமதி சுஜீவா நெல்சன் தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஆகியோர் இன்று (18) காலை தியதலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்தில் நிர்மானிக்கப்படும் புதிய நலன்புரி கடையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன அவர்களின் ஒருங்கிணைப்பில் முழுமையான உபகரணங்களுடனான படையினருக்கு சகாய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் அங்கு பணியாற்றும் படையினருடன் தற்போது நடைபெற்று வரும் சேர்த்தல் மற்றும் கட்டுமானம் குறித்து நெருக்கமான ஆய்வுக்குப் பிறகு இந்தத் திட்டம் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இராணுவ தலைமையகத்தின் சேவை வனிதையர் பிரிவு சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வோடு இணைந்துக்கொண்டனர். |