படையினரால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்ததானம்
17th December 2020
தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு இரத்த தானம் செய்ய முன்வருவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுவதன் காரணமாக, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 50 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் இந்த வார ஆரம்பத்தில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தங்களது இரத்தத்தை தானம் செய்தனர்.
செவிக்குளம் கிராமிய வைத்தியசாலைக்கு படையினரை அழைத்த வவுனியா இரத்த வங்கியின் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் படையினரிடமிருந்தும், அருகிலுள்ள கிராமங்களில் உள்ள ஒரு சில பொதுமக்களிடமிருந்தும் இரத்தத்தை சேகரித்தனர். கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் இரத்தத்தை வழங்க தயங்குகின்றமையினால் குறித்த நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2வது இயந்திரவியல் காலாட்படை படைப்பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
21 வது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே அவர்களின் நெருங்கிய ஒருங்கிணைப்பில் 213 வது காலாட் படை பிரிகேட் தளபதி கேஏஎன் ரசிக்க குமார மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. |