ஜப்பானிய தூதுவர் கொவிட் 19 தலைவரிடமிருந்து நிகழ்கால நிலைமைகளை அறிந்துக்கொண்டார்.

17th December 2020

இலங்கை ஜப்பானின் தூதர் அகிரா சுகியமா, இன்று (16) பிற்பகல் ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டிணட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, கொவிட் 19 பரவலை தடுத்தல், படையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, நாட்டில் தடுப்பு வழிமுறைகள் போன்றவை குறித்து இருதரப்பு கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

சந்திப்பின் முடிவில் இருவரும் நல்லெண்ணத்தின் அடையாளங்களாக நினைவுச் சின்னங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

செல்வி சிஹாரு ஓஷாய் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் காகு ஃபகுவுரா ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்துக்கொண்டனர். |