ஹைலேன்டர்ஸ் நலன்புரி திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி பங்கேற்பு
7th December 2020
கெமுனு ஹேவா படையணித் தலைமையகத்தின் காயமடைந்த போர்வீரர்களுக்கான செயற்கை கால்கள் நன்கொடை அளித்தல், லொத்தர் வெற்றியாளர்களுக்கான பரிசு விநியோகம் மற்றும் அதிநவீன புதிய விடுமுறை இல்லத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல நலன்புரித்திட்டங்களானது பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி காலை நன்பரீல் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நன்பரீல் பகுதியில் கெமுனு ஹேவா படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ‘Peacock Feather’ எனும் புதிய விடுமுறை விடுதியானது அன்றைய பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த விடுதிக்கான நிதியினை கெமுனு ஹேவா சேவா வனிதா பிரிவு மற்றும் கெமுனு ஹேவா படையணித் தலைமையகம் ஆகியன இணைந்து வழங்கின.
பெலிஹுலோயா நன்பரீலில் குளிரூட்டி வசதி அறைகளுடன் கூடிய புதிய கட்டிடமானது 7 வது பொறியியலாளர் சேவைப் படையணியினரின் மனித வளங்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது.குறித்த கட்டிடத்திற்கான அதிக நிதியினை குருவிட்டவிலுள்ள சேவா வனிதா பிரிவினால் செலவிடப்பட்டதோடு, புதிய வசதிகளுடன் கூடிய சேவையானது பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் தருவிக்கப்படும். கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க அவர்களின் அழைப்பின் பிரகாரம்,அன்றைய பிரதம அதிதியவர்கள் கெமுனு ஹேவா படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அவந்தி அபேநாயக்க அவர்களுடன் இணைந்து புதிய விடுமுறை விடுதியினை திறந்து வைத்தார். மேலும் குறித்த விடுதியின் பெறுமதியானது 8.9 மில்லியனாகும்.
கெமுனு ஹேவா சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அவந்தி அபேநாயக்க அவர்களின் தலைமையில் வழங்கப்பட்ட அதிக நிதியுதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட குறித்த விடுதியானது செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசை வசதிகள், சுடு நீர், ஆடம்பரமான தளபாடங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் காயமடைந்த கெமுனு ஹேவா படை வீரர்களுக்கான புதிய செயற்கை கால்களையும் அன்றைய பிரதம அதிதி வழஙகி வைத்தார்.கேணல் டி. ஹமிடன் மற்றும் அவரது துணைவியின் ஒருங்கிணைப்பின் மூலம் கெமுனு ஹேவா படை வீரர்களுக்கான குறித்த செயற்கை கால்களுக்கான செலவினங்களை பல நன்கொடையாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அடுத்ததாக கெமுனு ஹேவா படையணியின் லொத்தர் சீட்டிலுப்பின் பரிசளிப்பு , ‘மினிபுர கெமுனு நாத’ வர்த்தக கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி – 2019 ஜூலை லொத்தர் சீட்டிழுப்பு ஆகிய நிகழ்வுகளின் வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
லொத்தர் சீட்டிலுப்பில் முதல் வெற்றியாளருக்கு மஹிந்திரா எலக்ட்ரிக் கார் டிக்கெட் எண்: 210377, 2 வது வெற்றியாளருக்கு மஹிந்திரா முச்சக்கர வண்டி மற்றும் 3 வது வெற்றியாளருக்கு மஹிந்திரா மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வழங்கி வைத்தார்.
பின்னர் ‘ஹைலேண்டர்ஸ்’ சுற்றுச்சூழல் மற்றும் சாகச விடுமுறை ரிசார்ட் வலைத்தளத்தை (www.highlandersecoresort.lk) அதிகாரப்பூர்வமாக பிரதம அதிதியவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குழு புகைப்படத்திலும் தோன்றினார்
யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க, மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன, படையணிகளின் , சிரேஷ்ட அதிகாரிகள், கெமுனு ஹேவா சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுச் சிப்பாயினர் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப் பிடித்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மஹிந்திரா எலக்ட்ரிக் கார், மஹிந்திரா முச்சக்கர வண்டி, மஹிந்திரா மோட்டார் பைக், ஸ்கூட்டர், எல்இடி டிவி, ஸ்மார்ட் போன்கள் மற்றும் பல வீட்டு பொருட்கள் உள்ளடங்கிய லொத்தர் சீட்டிழுப்பு ஆறுதல் பரிசுகள் வெற்றியாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. |