இராணுவ சேவா வணிதா பிரிவினால் காய்கறி வினியோகம்
3rd November 2020
தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட இராணுவ குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவா வனிதா பிரிவானது காய்கறி பக்கெட்டுகளை மானிய விலையில் விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுத்தது.
நாரஹேன்பிட்டியின் மேனிங் நகரத்திலுள்ள உள்ள இராணுவ குடியிருப்புகளுக்குச் சென்ற இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (4) இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
குறித்த காய்கறி பக்கெட்டுகளில் சுமார் 5-7 வகையான காய்கறிகள் உள்ளன
திருமதி சுஜீவ நெல்சன் அவர்கள் பல சிரேஷ்ட சேவா வணிதா உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் ஆகியோருடன் மேனிங் நகரத்தில் இடம்பெற்ற குறித்த விநியோக திட்டத்தில் இணைந்து கொண்டார். |