மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசுந்தர அவர்களின் சேவையினை பாராட்டிய இராணுவத் தளபதி

28th October 2020

பாதுகாப்புத் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதன்ழக்கிழமை (28) ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இருந்து இராணுவ இயந்திரவியல் காலாட் படையணிக்கு இணைக்கப்பட்ட 23 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசுந்தர அவர்களுக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குறித்த சிரேஷ்ட இராணுவ அதிகாரி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு சிறந்த அர்ப்பணிப்பு சேவைகளை வழங்கியுள்ளார்.

இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டிய லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் , ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசுந்தர அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் இராணுவத்தில் இயந்திரவியல் காலாட் படையணி உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.

வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி தனது தளபதியவர்களின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். உரையாடலின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் அவரை பாராட்டும் முகமாக அவருக்கு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். இராணுவத் தளபதிக்கும் அவரினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது. |