இராணுவ பண்ணையில் உற்பத்தியான முட்டைகள் இராணுவ சேவா வனிதா பிரிவிற்கு வழங்கள்
26th October 2020
இராணுவத்தினரிடையே ஊட்டச்சத்து காரணியை வழங்குவதை அடிப்படையாகவும்,முட்டைகளில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தையும் கருத்தில் கொண்டு, இராணுவத் தளதியின் 'துரு மிதுரு'நவ ரட்டக்’ எண்ணக்கருவினூடாக இராணுவத் தளதியின் வழிகாட்டலின் கீழ், இராணுவத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முழு நிறுவனத்திற்கும் முட்டைகளை பெருமளவில் உற்பத்தி செய்வதற்காக அன்மையில் முட்டைக் கோழி வளர்ப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டளவில்,இராணுவம் முட்டைகளில் தன்னிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டை உற்பத்திக்கான ஆரம்ப திட்டம் (கட்டம் 1) இந்த ஆண்டு ஓகஸ்டில் 25,000 கோழிக் குஞ்சிகளுடன் 5 ஆவது (தொண்) இலங்கை பொது சேவை படையணி முகாமைத்துவத்திலான பொலன்னறுவை- கல்கந்த இராணுவ பண்ணையில் இராணுவத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திராஜித் கந்தனஆராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டது. அவர் எதிர்காலத்தில் பல இராணுவ பண்ணைகளையும் உள்ளடக்கி 100,000 முட்டையிடும் கோழிகள் வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
கல்கந்த இராணுவ பண்ணையில் முட்டை இடும் கோழிகளால் இடப்பட்ட 50,000 புதிய முட்டைகளின் முதல் பங்குகளானது முதன்முறையாக வெலிகந்தையிலுள் உள்ள கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கட்டளையின் கீழ் சேவை புரியும் படையினரின் பயன்பாட்டிற்காக அப்படைத் தலைமையகத்திற்கும் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள இராணுவ சேவா வணிதா நலன்புரி விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவ சேவா வனிதா பிரிவிற்கும் அனுப்பப்பட்டன.
திங்களன்று (26), திருமதி சுஜீவ நெல்சன் தலைமையிலான சேவா வணிதா பிரிவின் அலுவலகத்திற்கு10,000 முட்டைகள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திராஜித் கந்தனஆராச்சி சார்பாக, கல்கந்த இராணுவ பண்ணையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜே.ராஜநாயக்க அவர்கள் இராணுவ சேவா வணிதா பிரிவின் கேணல் (நிர்வாகம்) அனுர விஜேகோன் அவர்களிடம் குறித்த முட்டைகளை நலன்புரி விற்பனை நிலையங்களில் மானிய விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகம் மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகங்களுக்கு கீழ் உள்ள அனைத்து பிரிவுகளிலும் முட்டைகளின் முழு தேவையையும் டிஏஎல் பூர்த்தி செய்த பின்னர் , கட்டம் 2 இன் கீழ் உள்ள டிஏஎல் 2021 ஆம் ஆண்டிற்குள் குருநாகல் மற்றும் பலாலே ஆகிய இடங்களில் உள்ள இராணுவ பண்ணைகளில் உள்ள கோழி பண்ணைகளின் விரிவாக்கத்துடன் முட்டைகளில் முழு இராணுவத் தேவையிலும் தன்னிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறது. இந்த திட்டத்தில் மேற்கு, மத்திய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து படைப் பிரிவுகளையும் உள்ளடக்கி 2021 ஆம் ஆண்டிற்குள் 100,000 முட்டை இடும் கோழிகளை வளர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த கோழிகளுக்கு உணவு வழங்குவதற்காக, அந்த விவசாய மையங்கள் கோழி தீவனத்திற்காக ஏற்கனவே பண்ணை உற்பத்தி மக்காச்சோளம், சோயா, சோளம் மற்றும் பிற தானிய தானியங்களை பயிரிட்டு உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் மூலதனச் செலவில் கிட்டத்தட்ட பாதியைக் குறைத்து, அந்த கோழிகளின் பராமரிக்க முடியும்.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், இந்த அத்தியாவசிய திட்டத்தை மேற்கொண்ட வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகம் முழு அமைப்பின் தினசரி நுகர்வுக்கு தேவைப்படும் அளவிற்கு முட்டைகளில் தன்னிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறது.உற்பத்தி செயல்முறை தொடரும் போது அதிக முட்டையை இடும் கோழிக்குஞ்சு இனங்களை தேர்ந்தெடுக்கவும் இது எதிர்பார்க்கப்படுகிறது.கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள படையினரை அதிகளவிலான உற்பத்திகள் குறித்து விஞ்ஞான அறிவைப் பெற டிஏஎல் வசதி செய்துள்ளது, மற்ற நாடுகளிலும் அந்தந்த நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.
முட்டைக் கோழி வளர்ப்பு என்பது வணிக முட்டை உற்பத்தியின் நோக்கத்திற்காக முட்டை இடும் கோழி பறவைகளை வளர்ப்பது. முட்டைக் கோழிகள் அத்தகைய ஒரு சிறப்பு வகை கோழிகளாகும், அவை ஒரு நாள் வயதாக இருக்கும்போது வளர்க்கப்பட வேண்டும். அவைகள் 18-19 வாரங்கள் முதல் வணிக ரீதியாக முட்டையிடத் தொடங்குகின்றன. |