மிஹிந்து செத் மெதுர விடுதியில் காலஞ்சென்ற படை வீரர்
19th October 2020
2008 செப்டம்பர் 29 ஆம் திகதியன்று எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக விசுவமவுவில் இடம்பெற்ற மனிதாபிமானமான நடவடிக்கையின் போது, 11 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த படை வீரர் கோப்ரல் எச்.டி.டி பிரசன்ன அவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அதன்பின்னர் அவர் அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுர விடுதியில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு மற்றும் புனர்வாழ்வில் இருந்த வேளையில் காலமானதாக இராணுவ மறுவாழ்வு பணிப்பகம் இன்று 21 ஆம் திகதி அறிவித்ததுள்ளது.
32 வயதையுடை ஹாலி-எல பிரதேசத்தை சேர்ந்த படை வீரர் கோப்ரல் எச்.டி.டி பிரசன்ன அவர்கள், இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையில் விசுவமடுவில் அணிவகுத்து வந்த படையினருக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்பினரின் மேற்கொண்ம மோட்டார் குண்டு தாக்குதலுக்கு இலக்காகி, நிரந்தரமாக காது கேளாதவராக மாறி, மிஹிந்து செத் மெதுர விடுதியில் படுக்கையில் கிடந்தார். குறித்த விடுதியில் முதன்முதலில் காலமான நபர் இவராகும்.பல சிறு துகள்கள் அவரது தலையில் குத்தியதனால் அடுத்தடுத்த பெருமூளை வாதம் மற்றும் அவரது பேச்சை இழக்க நேரிட்டது, ஆனால் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மோசமான உடல்நிலை சிக்கல்களால் சில நாட்களுக்கு முன்பு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார்.
புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர அவர்கள் இன்று (21) காலை மிஹிந்து செத் மெதுர விடுதியின் தளபதி அவர்களுடன் கொழும்பு இராணுவ வைத்திசாலைக்கு சென்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் நிறைவேற்று பணிப்பாளர் நாயக கிளை மற்றும் பனாகொடையிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் ஒருங்கிணைப்பிலான சம்பிரதாயங்களில் கலந்து கொண்டார். இராணுவத் தளபதி, இலங்கை இலேசாயுத காலாட் படையணி யின் படைத் தளபதி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி மத்திய கட்டளைத் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் முறையான இராணுவ இறுதி சடங்குகள் விரைவில் நடைபெறும். |