வைரஸ் தொற்றிய மூலத்தை அடையாளம் காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன - நோப்கோவின் தலைவர்

4th October 2020

"காச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆடைத் தொழில்துறை பெண் ஊழியர் ஒருவர் கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்த பின்னர் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளன நேற்று மாலை (3) கம்பாஹா மாவட்ட வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த நோயாளி உடனடியாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியச்சாலைக்கு (ஐ.டி.எச்) மாற்றப்பட்டார், மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பரவுதலை தடுப்பதற்கு அப்பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிரபிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (4) ராஜகிரியாவில் சிறப்பு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

கெளரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர மற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹான ஆகியோர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இணைத்அட்டவணையில் தலைமைத் தலைவர்களாக பங்கு கொண்டனர். பரவுவதற்கான அபாயத்தை நாங்கள் இதுவரை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கு பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஏனைய தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வது அவசியமாகும் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் ஆலோசனையின் பிரகாரம் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் மேலும் அவர்களின் சுகாதார நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆடைத் தொழிற்சாலையின் பெண் ஊழியர் ஒரு மேற்பார்வையாளர் அவருடன் தொழிற்சாலை போக்குவரத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் அனைவரும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொற்றளரிடன் தொடர்புடைய அனைவருக்கும் சுகாதார அமைச்சு பி.சி.ஆர் சோதனைகளை நடத்துகின்றது. அவர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான மூலத்தை கண்டுபிடிக்கும் வரை அப்பகுதிகளின் இயக்கத்தினை கட்டுப்பாடுத்துவதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை செல்வதில் விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் வெளிநாட்டிலிருந்து குழுக்களாக இலங்கைக்கு திருப்பி அழைப்பது குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் மொத்தமாக வந்தால் எம்மால் நிர்வகிக்க முடியாது. அதனால் தான் நாங்கள் அவர்களை குழு குழுவாக அழைத்து வந்தோம் பொதுமக்கள் சுகாதார முக்கவசங்கள் அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு சிலர் சுகாதார வழிகாட்டுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிப்பதில் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டினார்.

கெளரவ அமைச்சர் மற்றும் மற்றவர்களும் தலைமை மேசையில் ஊடக மாநாட்டில் பங்குபற்றினர். |