கடத்தப்பட்ட மஞ்சள் மற்றும் கேரள கஞ்சா வீதித் தடையில் ஈடுபட்ட இராணுவத்தினரால் கைப்பற்றல்
24th September 2020
மன்னாரில் உள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவழுக்கு அமைய, 7 ஆவது விஜயபாகு கலாட் படையணியின் படையினர் மற்றும் 15 ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 205.7 கிலோ மஞ்சள் மற்றும் 104 கிலோ கேரள கஞ்சாவுடனான நான்கு இலங்கையை சேர்நத சந்தேக நபர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டனர்.
543 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி – மன்னார் வீதிப் பகுதியில் வீதித் தடைப் பரிசோதனையில் ஈடுபட்ட 7 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் சந்தேகத்தின் பேரில் ஒரு சிறிய லொரியை (டிமோ பட்டா) தடுத்து நிறுத்தியதோடு வாகனத்தை பரிசோதனை செய்தனர். அவ்வாறு பரிசோதனை செய்யும்வேளையில், புதன்கிழமை (23) மாலை 6.30 மணியளவில் இரண்டு சந்தேக நபர்களுடன் சுமார் 8.2 லட்சம் மதிப்புள்ள மஞ்சளானது கைப்பற்றப்படன. அதே நேரத்தில், 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் கீழ் உள்ள 542 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது (தெண்) ஹெமுனு ஹேவா படையணியின் படையினர் குஞ்சிகுளம் வீதித் தடையில் வைத்து மன்னாரில் இருந்து குளிரூட்டப்பட்ட வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள கைது செய்தனர். கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சாவின் (கஞ்சா) மதிப்பு ரூபா .20.8 மில்லியனாகும்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி கடந்த சில நாட்களில் மன்னார் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. |