இலங்கைப் பீரங்கிப் படையின் 132வது ஆண்டு விழாவில் உயிர் நீத்த படையினருக்கு அஞ்சலி
17th September 2020
இராணுவத்தின் மிகப் பழமையானதும் புகழ்பெற்ற படைகளின் ஒன்றான இலங்கை பீரங்கி படை (SLA தேசத்திற்காக தனது 132 ஆண்டு கால சேவையை கொண்டாடியது. அதன் போது உயிர் நீத்த படையினருக்கு வியாழக்கிழமை (17) பனாகொடை இலங்கை பீரங்கி படை தலைமையகத்தில் நினைவஞ்சலி செய்யப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் இலங்கை பீரங்கி படை படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கை பீரங்கி படையின் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த படையினருக்கு அஞ்சலி செய்தார்.
பனாகொடை இலங்கை பீரங்கி படை தலைமையகத்திற்கு நுழைவாயிலில் படைத் தளபதியினால் வரவேற்கப்பட்டு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
தேசிய கீதம், இராணுவ கீதம் மற்றும் படையணி கீதம் பாடல் ஆகியவை முறையே பாடியதன் பிறகு விழாவில் சகல மத அனுஷ்டானங்கள் நடைப்பெற்றன. அடுத்து இலங்கை பீரங்கி படையினரின் நினைவுத் தூபியிக்கு பிரதம அதிதி இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரண்டு நிமிட மௌனஞ்சலியின் பின்னர் நினைவு அஞ்சலி பேருரை வாசிக்கப்பட்டது.
பின்னர் பிரதம அதிதி , படைத் தளபதி , சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் உயிர் நீத்த படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர். இறுதியில் நித்திய ஓய்வுக்குச் சென்றுள்ளமையை இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக சமிஞ்சை செய்யும் கடைசி இடுகை மற்றும் பினவாங்குதல் ஒலி எழுப்பப்பட்டது.
நிகழ்வில் இலங்கை பீரங்கி படையின் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், உயிர் நீத்த இலங்கை பீரங்கி படை படையினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் படையினர் பங்குபற்றினர். |