'கோத்தாபய' சிங்கள மொழிப் பதிப்பு நூல் மற்றும் 'பாதலாயோ' நாவல் வெளியீட்டு நிகழ்வு

7th September 2020

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் எழுதிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னர் சேவையாற்றியவரும் தற்போதய அதிமேதகு ஜனாதிபதியுமான லெப்டினன் கேணல் (ஓய்வு) கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான சிங்கள மொழிப் பதிப்பான 'கோத்தாபய' நூல் மற்றும் பாதால உலக குழுவினரின் உண்மையான செயற்பாடுகள் தொடர்பான 'பாதலாயோ' எனும் நாவல் உள்ளிட்ட நூல் வெளியீட்டு ஆரம்ப விழாவானது இன்று மாலை (6) கொழும்பு ஆனந்த கல்லூரியின் குலரத்ன கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மதகுரு உறுப்பினர்கள், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், ஜனாதிபதியின் பாரியாரான திருமதி அயோமா ராஜபக்ஷ, அமைச்சர்கள், போர் வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவர்கள், பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அரச அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய அழைப்பு விருந்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நூல் வெயியீட்டு ஆரம்ப நிகழ்வானது ஆதிமேதகு ஜனாதிபதி மற்றும் கொளரவ பிரதமர் ஆகியோரின் வருகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. அங்கு வருகை தந்த முதல் பெண்மணிக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன அவர்கள் பூச்செண்டுகளை வழங்கினார். ஐந்து கட்டளைகள் (பன்சில்) மற்றும் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அன்றைய பிரதம விருந்தினர் மற்றும் பிற புகழ்பெற்ற அழைப்பாளர்களால் பாரம்பரிய மங்கள விளக்கேற்றப்பட்டது.மேஜர் ஜெனரல் (ஓய்வு) குணரத்ன அவர்களால் ஒரு கண்ணியமான உணர்வையும், துணிச்சலையும் தேசபக்தியையும் நினைவுகூரும் தொகுக்கப்பட்ட கவிதை சரணங்களின் தொகுப்பு இடம் பெற்றதுடன் உயிர் நீத்த போர் வீரர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்து.

ஜனாதிபதி ஆலோசகர் திரு லலித் வீரதுங்க அவரகள் தனது முக்கிய உரையில் பாதுகாப்பு செயலாளர் தனது போர்க்கள அனுபவங்களின் அடிப்படையாகக் கொண்டும் மற்றும் ஏனைய இடங்களில் பாதுகாப்பு செயலாளராக தனது நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் போது மனித நேயமுள்ள ஒரு குடிமகனாக அத்தகைய புத்தகங்களை எழுதத் தூண்டியிருப்பதை சுருக்கமாகக் கூறினார். அன்றைய நாளின் 'கோத்தாபய’ நூலின் சிங்கள பதிப்பு மற்றும்' பாதாலயோ 'நாவல் ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வானது அன்று கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இரு புத்தகங்களின் முதல் பிரதிகளானது அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், மறைந்த புகழ்பெற்ற சிரேஷ்ட போர் வீரர் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கோபேகடுவ அவர்களின் துணைவியாரான திருமதி லாலி கோபேகடுவ, மறைந்த போர் வீரர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் துணைவியாரான திருமதி விஜயா விமலரத்ன ,பாதுகாப்பு தலைமைப் பிரதானியும்,இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ஒரு சிலர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அந்த புதிய போர்வீரர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதை மேற்கோள்கள் அதே நேரத்தில் அந்த புதிய புத்தகங்கள் போர் வீரர்களின் துணைவியரிடம் ஒப்படைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களினால் ஆங்கில மொழியினால் எழுதப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சிறந்த நன்மதிப்பினை பெற்றுக் கொடுத்த 'கோத்தாபய’ என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகமானது 2019 செப்டம்பர் 23 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது, மேலும் பாதாள உலக குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பாதால உலக குழுவினர்களின் வாழ்க்கையின் சிறப்பு கவனம் செழுத்தப்பட்ட புதிய நாவலான 'பாதலாயோ' குழுவினர்களின் உண்மையான அத்தியாயங்களை விவரிக்கிறது, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் புத்தகங்களைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆசிரியர், ஒரு தலைசிறந்த படைப்பாக மதிப்பிடப்பட்டு வாசகர்களை கவர்ந்ததும் இதுவரை சிறந்த விற்பனையானதுமான 'ரோட் டு நந்திகடல்' எனும் நூலினை எழுதியுள்ளார். இது போர் தொடர்பான சிறந்த நூலாகும். அவர் ‘கடோல் எத்து’, ‘ உத்தர தேவி’, எனும் நூல்களையும் எழுதியுள்ளார். மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னாவின் 'ரோட் டு நந்திகடல்' எனும் புத்தகம் வெளியிடப்பட்டபோது அனைத்து பதிவுகளையும் முறியடித்தது மற்றும் கொடூரமான போரினை வெற்றிகொண்ட போர் வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்வின் மத்தியில் அவரது பிளாக் பஸ்டர் நாவலான 'கடோல் எத்து' நூலானது வலம் வருகின்றது. |