இராணுவ மருத்துவக் கல்லூரியின் புதிய தலைவர் பதவியேற்பு

7th September 2020

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியினால் (04) ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் புதிய தலைவராக பிரிகேடியர் கிருஷாந்த பெர்னாண்டோ அவர்கள் மருத்துவ நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் நியமிக்கப்பட்டார்.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதோடு, களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரும் அறுவை சிகிச்சை தலைவருமான பேராசிரியர் கெமால் தீன் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். சில வருடங்களுக்கு நாட்டிலும் பிராந்தியத்திலும் இராணுவ மருத்துவத் துறையை ஒரு அத்தியாவசிய கோளமாக அபிவிருத்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற இந்த முதல் அறிவியல் மன்றத்தை நிறுவுவதில் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியானது சில ஆண்டுகலுக்கு முன்னர் முன்முயற்சி எடுத்தது.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய பிரதம அதிதி ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பமானது. தேசிய கீதம் பாடுதல், மங்கள விளக்கு ஏற்றுவது மற்றும் மரணித்த போர் வீரர்கள் அனைவரையும் கௌரவ படுத்துவதற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் ஆகியன இடம்பெற்றதுடன் ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன அவர்களின் வரவேற்பு உரையும் இடம்பெற்றன. சம்பிரதாய நடைமுறைகளுக்காக புதிய தலைவரான பிரிகேடியர் கிருஷாந்த பெர்னாண்டோ அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

கௌரவ அதிதியான பேராசிரியர் கெமால் தீன் அவர்களின் உரை இடம்பெற்றதோடு, இந்த நிகழ்வின் பிரதம விருந்தினரின் தனது உரையில் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி ஆரம்பத்தில் இருந்தே இராணுவ மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் அதன் பன்முகப்படுத்தப்பட்ட பயன்பாடுகளையும் அவர் பாராட்டினார்.

அன்றைய நிகழ்வானது புதிய தலைவரின் உரையுடன் நிறைவுற்றது. அதில் அவர் கல்லூரி மற்றும் அன்றைய சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார். சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, சிரேஷ்டஅரச அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், முப்படையிலுள்ள பல் மருத்துவர்கள் மற்றும் பிற அழைப்பாளர்கள் குறித்த நிகழ்வில்கலந்து கொண்டனர். |