புனித ‘தீகவாபி’ ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் புனர் நிர்மாணம்

2nd September 2020

வரலாற்று சிறப்பு மிக்க புனிதமான 'தீகவாபி' பாகோடவின் புனர் நிர்மாண பணிக்கான ஆரம்ப நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செல்வி அனுராத யஹம்பத், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 எதிர்பார பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பங்களிப்புடன் இன்று (29) காலை இடம்பெற்றன.

மிகவும் புனிதமான பதினாறு (சோலோஸ்மஸ்தான) வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான 'தீகவாபி' பாகொட பௌத்த பீடம் பாழடைந்த நிலையில் உள்ளதுடன் நீண்ட காலமாக புனரமைப்பு இல்லாததால், இந்த விவகாரம் 'தீகவாபி' தலைமை தலைவர் மஹஓயா சோபித தேரர் அவர்களால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 எதிர்பார பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களால் மேற்கொண்ட விஜயத்தின் போது குறித்த பிரச்சினை தொடர்பாக தலைமை தலைவருடன் கலந்துரையாடப்பட்டன.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல் மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் ஒப்புதலுடன் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைப் கொண்டுள்ள இப்புனித விஹாரையின் முழு புதுப்பித்தலையும் மேற்கொள்ள இராணுவமானது அதன் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைக் கொண்ட இராணுவத்தின் மனிதவளத்தினை பொறுபெடுத்துள்ளது.

மகா சங்கத்தால் ‘செத் பிரித்’ என்ற கோஷங்களுக்கிடையில் அனைத்து புகழ்பெற்ற பங்குதாரர்களும் சன்னதியில் பிரசாதம் மற்றும் மத அனுசரிப்புகளைச் செய்தபின், இந்த புனித இடத்தின் இன்றைய பழுதுபார்ப்பு பால் பானை கொதிக்கும் சடங்குடன் தொடங்கியது.

நிகழ்வினை ஆரம்பித்தவுடன் மஹியங்கனை ரஜ மகா விஹாரையின் விஹாராதிபதி உட்பட பல பிக்குகள் அனுஷாசன’ (சொற்பொழிவுகளை) நிகழ்த்தினர். ஆளுநர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் அரச அதிகாரிகள் மற்றும் இந்த திட்டத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் அனைவர் மத்தியிலும் உரையாற்றினர்.

புதுப்பித்தல் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வருகை தந்த பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆகியோரை கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே மற்றும் 24 படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் வீரகூன் கியோர் இணைந்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அதிகரன சங்கநாயக்க கிரிந்திவெல சோமரத்ன நாயக தேரர், கொழும்பு சம்போதி மகா விஹாரையின் தலைவரும் மற்றும் பெளத்த ஊடக தொடர்பின் பணிப்பாளருமான பொரலந்த விஜயரங்கான தேரர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி திலக் ராஜபக்ஷ, தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம் டாக்டர் செனரத் திசநாயக்க, அம்பாறை மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் திரு அயச கருணாரத்ன மற்றும் ஒரு சில அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். |