வடக்கின் நிலைமையை ஆராயும் நோக்கத்துடன் கோவிட் மைய தலைவர் வடக்கு பகுதிக்கு விஜயம்
17th July 2020
(ஊடக வெளியீடு)
கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடக்கு பகுதிக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்று நோயின் புதிய நிலைமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக இன்று (17) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள புதிய இராணுவ மருத்துவமனையை இராணுவ தளபதி அவர்கள் திறந்து வைத்தார். இந்த வைத்தியசாலையானது இராணுவத்தினரது தேவையின் நிமித்தம் 75 படுக்கைகள் மற்றும் பிற வசதிகளுடன் 11 ஆவது இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை வெளியிட்ட சமயத்தில் இராணுவ தளபதி மற்றும் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (நிறைவு) |