இராணுவ தலைமையகத்தில் புதிய சேவா வனிதா அலுவலகம் திறந்து வைப்பு
16th July 2020
இராணுவ சேவா வனிதா பிரிவின் புதிய அலுவலகம் கடந்த சில மாதங்களிற்கு முன்பு படையினரது நலன் கருதி 17 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று (16) ஆம் திகதி இந்த புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டன.
இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களது அழைப்பையேற்று பாதுகாப்பு தலைமை பிரதானியும், கோவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவர் மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து ரிபன்களை வெட்டி இந்த புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் புதிய வீடுகள் நிர்மானிப்பு, நிதி மானியங்களை வழங்குதல், இராணுவத்தினரது குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் விஷேட தேவையுடைய வீரர்களுக்கு நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவி வழங்குதல், மருந்துகளை வழங்குதல் போன்ற பல்வேறு விடயமான சேவைகளை இராணுவ சேவா வனிதா பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரைக்கும் இராணுவ சேவா வனிதா பிரிவினால் (2020 – 2021) ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் 1.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடுகட்டிட நிர்மானப் பொருட்கள் இராணுவத்திலுள்ள அவயங்களை இழந்த படையினர்களுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரியின் துணைவியாரது மருத்துவ செலவிற்காக ஒரு இலட்சம் ரூபாயும் மற்றும் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பட்ட தகுதி பெற்ற இராணுவ சிவில் ஊழியரின் மகனுக்கு மடிக்கணினி ஒன்றும் பரிசாக இந்த சேவா வனிதா பிரிவினால் நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் நலன்புரித் திட்டத்தின் கீழ் சேவா வனிதா அதிகாரி மற்றும் மூன்று படை வீரர்களுக்கு வீட்டு உதவி திட்டத்தின் கீழ் 350,000/= நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சேவா வனிதா கீதங்கள் இசைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தி நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது சேவா வனிதா பிரிவின் துணைத் தலைவியாக திருமதி சாகரா குணவர்தனவும், செயலாளராக திருமதி மாயா பெர்ணாண்டோவும், துணைச் செயலாளராக திருமதி எச்.பங்ஷஜயாவும், திருமதி பிரியதர்ஷினி ஶ்ரீனாக மக்கள் தொடர்பாடல் அதிகாரியாகவும், திருமதி குமுதினி வனிகசூரிய மற்றும் திருமதி ரமனி தெமடம்பிடிய ஆகியோர் அழகு நிலையத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |