இராணுவ தளபதி செயலக அலுவலக பணியாளர்களின் சுற்றுலா பயணம்

20th March 2018

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய குழுக்குகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவ தலைமையக இராணுவ தளபதி செயலக பணிமனையின் சேவையை புரியும் இராணுவம் மற்றும் சிவில் சேவக உத்தியோகத்தர்கள் 67 பேரது பங்களிப்புடன் முதல் தடைவையாக மார்ச் மாதம் 16 , 17, 18 ஆம் திகதிகளில் விஷேட சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இந்த சுற்றுலாவின் போது வரலாற்று மிக்க நிலையங்கள், தொல்பொருள் பிரபல நிலையங்கள், நீர்ப்பாசன நிலையங்களை பார்வையிட்டனர். அத்துடன் மாதுறுஒய விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் வன விலங்கு கண்காட்சி சாலை, துப்பாக்கி சூட்டு பயிற்சி நிலையங்கள், இசை நிகழ்ச்சி மற்றும் விருந்து உபசார நிகழ்வு இடம்பெற்றன. அப்போது அந் நிகழ்வில் இராணுவ தளபதியும் இணைந்திருந்தார்.

மேலும் இந்த சுற்றுலாவின் போது கண்டி தலதா மாளிகை, விக்டோரியா அனைக்கட்டுகள், சொரபொர குளம், மாதுறு ஓய அனைக்கட்டுகள் , பொலன்னறுவை கல் விகாரை மற்றும் புராதான நிலையங்களை பார்வையிட்டனர். அத்துடன் படகு சவாரிகளிலும் இந்த சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இந்த சுற்றுலா பயணத்தில் இராணுவ சேவை பணியகத்தின் கேர்ணல் உதய குமார, கேர்ணல் பிரசன்ன விஜேசூரிய மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|