கடற்படையினர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் கோவிட் மையம் தெரிவிப்பு
7th June 2020
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான டொல்பின் க்ளப்பில் இருந்த (5) பேரும், ரன்டம்பையிலிருந்து (49) பேருமான மொத்தமாக 54 பேர் தனிமைப் படுத்தலின் பின்பு இம் மாதம் (8) ஆம் திகதி சுகாதார சான்றிதழ்களுடன் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கோவிட் – 19 தேசிய நடவடிக்கை தடுப்பு மையத்தில் அறிக்கையை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் விக்ரமசிங்க அவர்கள் வெளியிட்டார்.
இன்றைய (8) ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் முத்தரப்பினால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 12,235 தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாடாளவியல் ரீதியாக முப்படையினால் நிர்வாகித்து வரும் 43 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 5,282 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியளவில் கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களில் குவைட்டைச் சேர்ந்த (16) நபர்களும், பங்களாதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரும், ஜக்கிய இராஜ்ஜியத்தை சேர்ந்த இருவரும், கட்டாரைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குவர்.
இன்று கோவிட் – 19 வைரஸ் நோய்க்கு உள்ளாகியிருந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 36 கடற்படையினர் பூரன குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 847 கடற்படையினர்களில் 508 பேர் பூரன குணமடைந்தது வைத்தியசாலையிலிருந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு வெளியேறியதுடன் இன்னும் கொரோ தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள கடற்படையினர் 339 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (8) ஆம் திகதி இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் வெளியிட்ட வீடியோ காட்சியை காணலாம். |