பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு தலைமை பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் புதிய பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடல்

29th May 2020

கொழும்பு 2 கொம்பன்னி வீதியில் மீள் கட்டுமானம் மேற்கொள்ளப்படும் புதிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் முப்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் இன்று 27 ம் திகதி காலை விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர பிரதிநிதிக்குழுவை அன்பாக வரவேற்றதனை தொடர்ந்து குழு முழு வளாகத்தை சுற்றுப் பார்வையிடுவதற்கு முன் புனர் நிர்மானம் மற்றும் மீள் கட்டுமானம், அதன் முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால செயல் திட்டம் மற்றும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவான விளக்கம் வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சினால் எதிர்காலத்தில் அதன் இறுதிக் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும் என மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அங்கு தெரிவித்தார். 2021 ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு கொள்கை வகுப்பிற்கான முப்படை, பொலிஸ் , தேசிய மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 1835ம் ஆண்டின் புராதன கட்டடக்கலையின் ஆடம்பர தன்மையும் மதிப்பும் அப்படியே பேணப்பட வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

இத் தேசிய பாதுகாப்புக் கல்லூரி உருவாக்குவதன் நோக்கம் எதிர்கால கொள்கை வகுப்பாளர்களுக்கு தேசிய பாதுகாப்பு மூல உபாயத்தைத் திட்டமிடுவதில் சமூக, பொருளாதார, அரசியல், இராணுவ, விஞ்ஞான மற்றும் நிறுவனம் தொடர்பாக விரிவான தெளிவு பெறுவதற்காகும் இந்த நோக்கத்தை மனதில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பாதுகாப்பு மற்றும் சிவில் சேவைகள் அதிகாரிகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பயிற்சி அளிக்க புதிய தேசிய பாதுகாப்புக் கல்லூரி உருவாக்கப்படுகின்றது. பல்வேறு பாதுகாப்பு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சி கற்கைகளை மேற்கொள்ள தேவையான புலத்தை உருவாக்கலும் நோக்கமாக அமைகின்றன.

இந்த 11 ஏக்கர் நிலம் பிரித்தானிய ஆட்சி காலத்தில் அப்போதைய பிரித்தானிய இராணுவத்தின் சிலோன் ரைபிள் ரெஜிமென்ட் அதிகாரிகளுக்கு தங்குமிடம் கட்டுவதற்காக முதலில் வழங்கப்பட்டது. காலனித்துவ காலத்தில் பிரித்தானிய இராணுவத்தின் மறைந்த மேஜர் ஜெனரல் சேர் ஜான் வில்சன் 1835 ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி அடிக்கல் நாட்டினார். பின்னர் அது 1876 ல் கொழும்பு வணிக கம்பனிக்கு விற்கப்பட்டது அங்கு அவர்கள் தலைமையகத்தை உருவாக்கி 'அக்லேண்ட் ஹவுஸ்' என பெயரிட்டனர். 1976 ல் அரச தேசிய மயமாக்கல் கொள்கையின் கீழ் சுவிகரிக்கப்பட்டு கடற்படைக்கு வழங்கப்பட்டது. 1990 ம் ஆண்டு விசும்பாய என மறு பெயரிடப்பட்டு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாகவும் ஒரு சில அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது. சமீப காலங்களில் அரசாங்கத்தின் ஊடக இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது. |