இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் படையினருக்கு இடம் பெற்ற கருத்தரங்கு

24th February 2018

ஓய்வு பெற்ற முப் படையைச் சேர்ந்த அதி உயர் அதிகாரிகளின் சங்கம் மற்றும் பணி அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழில் சங்க அமைப்பு போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் உழைப்பு ஒற்றுமை வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் இராணுவ-சிவில் கூட்டுத்தொகையை கட்டியெழுப்புதல் ' எனும் தலைலைப்பிலான கருத்தரங்கு கடந்த வெள்ளிக் கிழமை (23) மாலை கொழுப்பு 7இல் அமைந்துள்ள இலங்கை தொழில் சங்க அமைப்பில் இடம் பெற்றதுடன் இக் கருத்தரங்கில் முப் படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் கடமையாற்றுகின்ற படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் உழைப்பு ஒற்றுமை வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் இராணுவ-சிவில் கூட்டுத்தொகையை கட்டியெழுப்புதல் ' எனும் தலைலைப்பிலான கருத்தரங்கு படையினருக்கு நிகழ்த்தப்பட்டது.

அந்த வகையில் இக் கருத்தரங்கில் தீவிரவாத வன்முறை தீவிரவாதம் வன்முறை தீவிரவாதத்தின் வடிவங்கள் சமூக அரசியல் விரக்தி அடக்குமுறை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் 5ஆர் திட்டம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதோடு “இது உங்களது இராணுவம் சிங்கள இராணுவம் அல்ல. இலங்கை இராணுவமாகும். அந்த வகையில் கடினப்பட்டு பெற்றுக் கொண்ட இச் சமாதானத்தை தக்கவைத்துக் கொள்ளவது உங்கள் யாவரதும் கடமையாகும்” எனவூம் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந் நிகழ்விற்கு தமது அழைப்பை ஏற்று வருகை தந்த ஓய்வூ பெற்ற முப் படையைச் சேர்ந்த அதி உயர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரியர் அட்மிரால் (ஓய்வு) எச் எஸ் ரத்னகீர்த்தி அவர்களுக்கு இராணுத் தளபதியவர்களால் விசேட நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இலங்கை தொழில் சங்கமானது மருத்துவம் பொறியியல் கணக்கியல் கட்டிடக்கலை சட்டம் மேலாண்மை வங்கி நகர திட்டமிடல் கணினி விஞ்ஞானம் மனிதவள மேலாண்மை போன்ற 30ற்கு மேற்பட்ட பணிகளை உள்ளடக்கிய 60 000ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு 47 சங்கங்களைத் தன்வசம் கொண்டு காணப்படுகின்றது. மேலும் இப் பொது அரச சங்கமானது 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.

|