இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

21st February 2018

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமைஹோமாகமையில் அமைந்துள்ள தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வானது இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இந்த போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

மூன்று நாட்கள் இடம்பெறும் இப் போட்டியில் இராணுவ தொண்டர் படையணியில் உள்ள அனைத்து படையணிகளும் பங்கேற்றிக் கொள்ளுவதுடன் ,750 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பர். மேலும் இப் போட்டிகளில் 48 விதமான விளையாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியினால் இராணுவ கொடிகளை ஏற்றி இராணுவ கீதங்களை இசைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினரை நினைவு படுத்தும் முகமாக இரண்டு நிமிடமௌன அஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முதல் கட்டமாக பிரதம விருந்தினரால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்து விளையாட்டு வீரர், வீராங்களைகளால் சத்திய பிரமாணம் செய்து நடுவர்களின் மேற்பார்வையில் இந்த விளையாட்டுகள் ஆரம்பமானது.

தொண்டர் படைத் தளபதி உட்பட இராணுவ சிரேஷ்ட அதிகாரியினால் பங்கு பற்றிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விளையாட்டு போட்டிகளில் மரதன், ரிலே , ஓட்டங்கள், பட், ஜவலீன், நீளம் பாய்தல், உயரம் பாய்தல் போன்ற விளையாட்டுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இப்போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வுகள் இராணுவ தளபதியின் பங்கேற்புடன் (22) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெறும்.

இந்த ஆரம்ப விளையாட்டு போட்டிகளுக்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவ விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இணைந்து கொண்டனர்.

|