மேலும் கூடுதலான நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு -நொப்கோ தலைவர் தெரிவிப்பு
22nd April 2020
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மாலை (22) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகமும் மருத்துவ நிபுணருமான வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
‘’பாகிஸ்தானில் பயிற்சி பாடநெறிகளில் கலந்து கொண்ட 82 இராணுவம்,கடற் படை மற்றும் விமானப் படை உட்பட 106 நபர்கள் 21 ஆம் திகதி மாலை லாஹூர் விமான நிலையத்தில் இருந்து யுஎல் 1206 விமானத்தின் மூலம் நாடு திரும்பினர். அவர்களின் பயிற்சிக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் பாகிஸ்தானில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாமதித்து வைக்கப்பட்டிருந்தனர். குறித்த 106 பேரில் 24 பேர் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக சென்ற மாணவர்கள். அவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி குறித்த இராணவ, விமானப்படை மற்றும் ஏனைய சிவில் நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்ட்டுள்ளதுடன் கடற்படையினர் கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
நேற்றைய தினம், நாங்கள் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,பலாலி,மற்றும் இரனைமடு ஆகிய இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4348 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்பொழுது, 2690 பேர் 26 தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று பிலியந்தல பிதேசத்தில் இருந்து இனங்காணப்பட்ட கோவிட்-19 தொற்றுக்குள்ளான மீன் வியாபாரியுடன் தொடர்புடைய மேலும் 23 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை சுகாதார திணைக்களம் மற்றும் கடற்படையினரால் குறித்த பிரதேசத்தில் தொழில் புரியும் நபர்களுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தம்புள்ள விஷேட வர்த்தக மையத்தின் நன் கொடையாளர்களினால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவான மரக்கறிகள் கொழும்பு,கம்பஹா,கழுத்துரை,மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள வரிய குடும்பங்களுக்கு நேற்றும் இன்றும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
முழுமையான காணொளியின் விபரம் பின்வருமாறு. |