வர்த்தகர்களினால் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு
18th April 2020
இலங்கை மின்சார உபகரண வர்த்தக சம்மேளன பிரதி நிதிக் குழுவினர் , பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சில தினங்களுக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து, சுகாதார உபகரண இருப்புக்களை அன்பளிப்புச் செய்தனர்.
இந்த இருப்புக்களில் 200 பாதுகாப்பு உடைகள் மற்றும் முப்படையினர் மற்றும் சுகாதார ஊளியர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை முகாமைத்துவம் செய்வதற்கும், வைத்தியசலைகளில் உள்ள கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்ளுக்கு சிகிச்சையளிக்கும்போது பயன்படுத்தக்கூடியதான 200 முகக்கவசங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு தம்மிக்க சமரவிக்ரம,செயலாளர் திரு பி சேகர அவர்கள் இவ்வன்வளிப்பினை இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் வைத்து வழங்கினர்.
இத்திட்டமானது, இராணுவ பேச்சாளரும் இராணுவ ஊடகப் பணிப்பாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க மற்றும் திவன பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் திரு சியாம் நுவான் கனேவத்த ஆகியோரின் ஒருங்கினைப்பில் இடம்பெற்றது.
நொப்கோவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறித்த அன்பளிப்பினை பெற்றுக் கொண்டதுடன் அவர்களின் இதயபூர்வமான சிந்தனைக்கு தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். |