மேலும் பிசிஆர் மருத்துவ பரிசோதனை பெறுபேறுகள் எதிர்பார்ப்பு-லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு
15th April 2020
கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் காணொளி கிளிப் 15 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
‘’இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தியத்தலாவை மற்றும் கஹகொல்ல தனிமைப்படுத்தல்மையங்களில் இருந்து இன்று 15 ஆம் திகதி 51 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தங்களது வீடுகளுக்குச் சென்றனர். அதன்படி முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 3701 நபர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். தற்பொழுது இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 12 தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் கடற் படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 4 தனிமைப்படுத்தல் மையங்கள் ஆகிய மையங்களில் 1431 நபர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
‘’பூனானை தனிமைப்படுத்தல் மையத்தில் 15 ஆம் திகதி 190 பிசிஆர் பரிசோதனைகளை நாங்கள் நடத்தியுள்ளோம். அதேவேளை,பூனானை தனிமைப்படுத்தல் மையத்தில் ஏப்ரல் 11-14 ஆம் திகதி வரை 788 பிசிஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டன. இன்று, நாங்கள் 378 பரிசோதனை பெறுபேறுகளை பெற்றுக்கொண்டதோடு, மிகுதி நாளை எங்களுக்கு கிடைக்கும்.பிசிஆர் பரிசோதனைகள் மூலம் நேற்று நாங்கள் 15 கோவிட்-19 நோயாளர்களை இனங்கண்டு கொண்டோம். அவர்களைஅனைவரும் தனிமைப்படுத்தல் மையகைளில் உள்ளவர்களே தவிர வெளியில் உள்ளவர்கள் அல்ல என்பது விஷேடமாகும். அவர்கள் அனைவருக்கும் எதுவிதமான வைரஸ் அறிகுறிகளும் தென்படாதது விஷேடமான விடயமாகும். தொற்றுக்குள்ளானவர்களின் கண்டுபிடிப்பு விடயம் பின்வருமாறு.’’
அதேவேளை, முப்படையினர் மற்றும் பொலிசாரினால் நடாத்தப்படும் இன்னிசை நிகழ்வானது தொர்ந்தும் நடாத்தப்படும். மற்றுமொரு இன்னிசை நிகழ்வானது கொப்பனிதெருவில் இன்று மாலை குடியிருப்பு மாடிக்கருகாமையில் இடம்பெறும்.
காணொளியின் முழுமையான விபரம் பின்வருமாறு. |