படைக்கலச் சிறப்பணியினால் கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான பிபிஇ செட் மற்றும் கிருமி நீக்கும் அறை வைத்தியசாலைக்கு வழங்கிவைப்பு
7th April 2020
பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதயுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின்பிரகாரம் இலங்கை படைக்கலச் சிறப்பணியினர் (எஸ்.எல்.ஐ.சி) ஒரு சிறப்பு கிருமி நீக்கும் அறை மற்றும் 30 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகளை கண்டுபிடித்து இன்று காலை (7) கொழும்பு தெற்கு வைத்தியசாலைக்கு கையளித்தனர்.
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியன மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரின் உதவியுடன் ஓரிரு நாட்களில் அவற்றை கண்டுபிடித்தார்.
மருத்துவமனை அதிகாரிகளுடன் சுருக்கமான சந்திப்புக்குப் பின்னர் குறித்த கண்டுபிடிப்புக்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேஜர் ஜெனரல் லியனகே அவர்களினால் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இலங்கை படைக்கலச் சிறப்பணியினர் இன்று காலை டி சோய்சா மகப்பேறு வைத்தியசாலைக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்தக்கூடிய மேலும் 14 பிபிஇ கிட்களை இன்று காலை நன்கொடையாக வழங்கினர்.
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தாரக ரத்னசேகர, இலங்கை படைக்கலச் சிறப்பணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் தேவப்பிரிய, இலங்கை படைக்கலச் சிறப்பணியின் மூத்த அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். |