கொரோனா வைரஷ் தடுப்பு திட்டங்களுக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவம் பொதுமக்களிடம் வேண்டுகோள்

10th March 2020

(ஊடக வெளியீடு)

சீனாவிலிருந்து பரவியுள்ள கோவிட் – 19 வைரஷ் நோய் காரணமின்மையால் இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானிலிருந்து எமது நாட்டிற்கு நேற்றைய தினம் (10) ஆம் திகதி வருகை தந்திருக்கும் நபர்கள் புனானையிலுள்ள கந்தக்காடு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மத்திய நிலையத்தில் இவர்களுக்கு மருத்துவ சோதனை நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புகுழு மூலம் இவர்கள் கண்காணிக்கப்பட்டு இவர்களுக்கான அனைத்து வைத்திய வசதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது ஆலோசனைக்கமைய 72 மணித்தியால காலப் பகுதியினுள் இந்த மத்திய நிலையம் அனைத்து வசதிகளுடன் இரண்டு மாடிக்கட்டிடங்களை கொண்டு தடுப்பு அறைகளை உள்ளடக்கி இராணுவத்தினரது பூரன ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

எமது நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டவர்களை நேற்றைய தினம் வாகனங்களின் மூலம் இராணுவத்தினரது தலைமையில் கிழக்கு பகுதிகளுக்கு அழைத்து வரும் போது அப்பிரதேச மக்களினால் இவர்களை இந்த பிரதேசத்தினுள் அழைத்து வருவதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

இம் மாதம் (10) ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலை நிவாரன வைத்தியர் மற்றும் உளவியல் சுகாதார சேவை பணியகத்தின் பிரதி பணிப்பாளர் கேர்ணல் சவீன் கமகே உட்பட 6 வைத்தியர்கள் இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 305 நபர்களை பொறுப்பேற்றுக் கொண்டனர். அத்துடன் 24 மணித்தியாலயத்தினுள் தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகன் உட்பட வெளிநாட்டவர்கள் இருவரும் இந்த குழுக்களில் உள்ளடக்கப்படுவர். இவர்கள் முன்பு தியதலாவையில் வைத்து தடுத்து வைக்கப்பட்டு நபர்களுக்கு வைத்திய வசதிகளை வழங்கி வைத்ததைப் போல் மேற்கொண்ட பரிசோதனைகள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்படும்.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ், விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரது உதவியுடன் பஸ் வண்டிகள் மற்றும் எம்ஜ ஹெலிக்கொப்டர்கள் மூலம் இந்த வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இம் மாதம் (10) ஆம் திகதி இறுதியாக வருகை தந்த 57 வெளிநாட்டு நபர்கள் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூனானை மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த செயற்பாடுகள் மூலமாக எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாதவாறு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையர்களது சுகையீன பாதிப்புக்களுக்கு பங்கம் ஏற்படாதவாறு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் இந்த கொரோனோ வைரஷ் தடுப்பு நடவடிக்கை பணிகள் சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது.

இந்த மத்திய நிலையத்தில் இவர்களுக்கு மருத்துவ சோதனை நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புகுழு மூலம் இவர்கள் கண்காணிக்கப்பட்டு இவர்களுக்கான அனைத்து வைத்திய வசதிகளும் மேற்கொண்டு வருகின்றமையால் இந்த செயற்பாடுகளிற்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதற்கு உங்களது பாரிய ஒத்துழைப்பை வழங்கி வைக்குமாறு இலங்கை இராணுவம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றது. (நிறைவு) |