இராணுவ சேவையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இராணுவ உயரதிகாரிக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

13th January 2020

இலங்கை இராணுவத்தில் மூன்று தசாப்த காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி. விஜித ரவிப்பிரிய அவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி காலை பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையக பணிமனையில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் மேஜர் ஜெனரல் ஜி. ரவிப்பிரிய இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவைகளையும், எல்டிடிஈ பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இவரது பங்களிப்பு பணிகளையும் கௌரவித்து பாராட்டுக்களை தெரிவித்தார். பின்பு இவரது எதிர்கால வாழ்க்கை சிறந்த முறையில் அமைய வேண்டும் என்று ஆசீர்வதித்து வாழத்துக்களை தெரிவித்தார்.

இறுதியில் இராணுவ தளபதி மற்றும் இந்த உயரதிகாரிக்கு இடையில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரியாவர். இவர் இராணுவத்தில் பிரதான உயர் பதவிநிலை பதவிகளை வகித்துள்ளார். இராணுவ தலைமையகத்தில் பயிற்சி பணிப்பாளராகவும், 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, இராணுவ ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளர், இராணுவ பொது நிர்வாக பிரதானி, ஆளனி நிர்வாக பணிப்பாளர், இராணுவ திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி போன்ற உயர் பதவிகளை இராணுவத்தில் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |