இராணுவத்தினரின் உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
8th January 2020
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு 320 பாடசாலை உபகரண பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பாடசாலை உபகரண பொதிகள் நன்கொடையாளியான திரு சுரேந்திர சில்வா அவர்களது நிதி அனுசரனையுடன் கட்டிக்காடு தமிழ் கலவன் பாடசாலையில் இம் மாதம் (6) ஆம் திகதி இடம்பெற்றன. 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கொட்டுவேஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் 553 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி மேஜர் ஜெனரல் கொடுவேஹொட அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அத்துடன் நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |