இராணுவ குடும்பத்தினரது பிள்ளைகளுக்கு புதிய புலமைப் பரிசு திட்டங்கள்
3rd January 2020
இம் மாதம் (2) ஆம் திகதி ரூபவாகினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘சங்கிந்த ‘ நிகழ்ச்சியினூடாக பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ குடும்ப அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு 50 மில்லியன் ரூபாய் வரையான புதிய புலமைப்பரிசு திட்டங்கள் வழங்குவதாக தெரிவித்தார்.
"இந்த ஆண்டு முதல், இலங்கை இராணுவ தொண்டர் படையணி (SLAVF) ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான உதவித்தொகை விருது திட்டத்தின் கீழ் இராணுவத்தின் வழக்கமான சலுகைகளை உள்ளடக்கி இந்த நலன்புரி நிதியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இராணுவ குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புதிய புலமைப் பரிசு திட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியவர்கள் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு சுபசாதனையளிப்பதன் மூலம் இராணுவ வீரர்களது அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சாதாரன பொது தராதர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இராணுவ அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வரை சிறப்பு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படுமென்று இராணுவ தளபதியவர்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்வினூடாக தெரிவித்தார்.
"எதிர்காலத்தில் சேமிக்கும் நடைமுறையைத் தொடரும் முகமாக இராணுவ வீரர்களது பிள்ளைகளுக்கு ஊக்குவிக்கும் ஒரு புதிய திட்டத்தின் கீழ், உதவித்தொகை திட்டத்திற்கு கூடுதலாக ரூ .10,000 - 15,000 = ஆரம்ப வைப்புத் தொகையுடன் அறிமுகப்படுத்தப்படும், என்றும் இதனால் வளர்ந்து வரும் படை வீரர்களது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியுமென்று தெரிவித்தார்.
“நேன குண பிரி விரு தரு அபிமான்” எனும்தொணிப்பொருள் கருத்திடத்தின் கீழ் இராணுவத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு நலன்புரி திட்டத்தை மேம்படுத்துவதற்கான கருத்திட்டங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு முன்வைக்கப்பட்டு ஒத்துழைப்பை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன் வைக்கப்படும் என்றும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
இராணுவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வியை மேம்படுத்துவதற்காக சமூகத்தில் வழங்கப்படும் சலுகைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தனியார் துறை அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவ தளபதி அவர்கள் இந்த நிகழ்ச்சியின் ஊடாக கேட்டுக் கொண்டார்.
இந்த தொலைக்காட்சி நிகழ்வில் இராணுவ தளபதியுடன் இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கே.பி நுகேகொட அவர்கள் இணைந்திருந்தனர்.
இந்த தொலைக்காட்சி வீடியோ காட்சிகளை இராணுவ இணையதளத்தில் பார்வையிடலாம். |