இலங்கை இராணுவ பயிற்சி முகாமில் 321 கெடட் அதிகாரிகள் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இராணுவத்தில் இணைந்துள்ளனர்

23rd December 2019

தியத்தலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பயிற்சி முகாம்மில் வரலாற்றில் ஒரு அழியாத நினைவுகளை சேமிக்கும் நிமித்தம் (21) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்ற கெடட் அதிகாரிகள் 321 பேர் கெடட் அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பு நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.

அத்துடன், பிரதம அதிதியின் வரவேற்பின் பின்னர் வெளியேறும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நிகழ்வாக பிரதான அதிதி, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன, இராணுவ தளபதி மற்றும் இலங்கை இராணுவ பயிற்சி முகாமின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ்.கே ஈஸ்வரன் ஆகியோர்களால் இலங்கை இராணுவ பயிற்சி முகாம் வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டன,

இலங்கை இராணுவ பயிற்சி முகாம்மில் இடம்பெற்ற வெளியேறும் அணிவகுப்பின் தொடக்கத்தில் நிகழ்வை நினைவுகூரும் வகையில், வண்ணமயமான கொடிகளுடன் இலங்கை காலாட்படையணியின் கட்டளை தளபதியான மேஜர் என்.ஐ.பி.கே கமகே அவர்களால். அணிவகுப்பைத் தொடர்வதற்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி பிரதாம அதிதியிடம் அனுமதி கோரப்பட்டன.

அத்துடன் இசைக்குழுவின் மெல்லிசையுடன், பிரதம அதிதியவர்களால் கௌரவ பிரதம அவர்கள் அணிவகுப்பு படையினரை பரிசோதனையிட்ட பின்னர், இராணுவத் தளபதியுடன் இணைந்து வெளியேறும் கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரத்தின் அடையாளமாக அதிகாரி கௌரவ வாள்கள் வழங்கப்பட்டன, இதையடுத்து, புதிய அதிகாரிகள் பிரதம அதிதிக்கு மரியாதை செலுத்தினர்.

இராணுவ பயிற்சி முகாம்மில் கெடட் அதிகாரி பயிற்சி இல. 87, 87 (பி), பிரிவில் தொண்டர்) கெடட் அதிகாரி பயிற்சி இல 59 தொண்டர்) கெடட் அதிகாரி பயிற்சி இலக் 16 மற்றும் தொண்டர்) கெடட் அதிகாரி மகளிர் 17 ஆகியவற்றில் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்த கெடட் அதிகாரிகள் முறையான பயிற்சிகளை பெற்று தேசத்தின் பாதுகாவலர்களாக பணியாற்றுவார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

"நாட்டின் பிரிவினைக்கான பல அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நமது தேசத்தின் இறையாண்மை நமது முப்படையினர்களால் பாதுகாக்கப்படுகின்றன. சில நாடுகள் அரசியல் மட்டத்தில் நமது ஆயுதப்படைகள் மீது கோபமாக இருந்தாலும், அதனுடன் தொடர்புடைய வெளிநாட்டு ஆயுதப்படைகள் எங்கள் படையினர்கள் சேவைகள் மிகச் சிறந்தவை என்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களின் தொழில் திறனைக் காட்டும் எங்கள் படையினர்கள் முன்மாதிரியாக செயல்பட்டன. உலகின் மிக கொடூர பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதன் மூலம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெருமைமிக்க இராணுவத்தில் நீங்கள் இன்று சேர்ந்துள்ளீர்கள், ”என்று கெளரவ பிரதமர் தனது சுருக்கமான உரையில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் தனது வாழ்துகள் தொரிவித்துக் கொண்டதன் மத்தியில், கெடட் அதிகாரி பயிற்சி இலக். 87, முதல் வரிசைக்கான மதிப்புமிக்க சின்னம் மற்றும் சிறந்த அனைத்து சுற்று அதிகாரிகளுக்கான கெளரவ வாள், குழுவுக்கான அதிகாரி டி.ஜி.பி.எச் கொதாகொட அவர்களுக்கு வழங்கப்பட்டன. கெடட் அதிகாரி பயிற்சி இலக். 87, (பி) இல், முதல் வரிசைக்கு மற்றும் அதிகாரிகளுக்கான கெளரவ வாள் மற்றும் சின்னம் ஆகியவை இக் குழுவின் அதிகாரி ஏ.எம்.சந்திரதிலக அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் கெடட் அதிகாரி பயிற்சி இலக் 17, முதல் வரிசையில் வெற்றி பெற்ற அதிகாரிக்கு வெற்றி கின்னம் அதிகாரிக்கான கெளரவ வாள் ஆகியவை குழுவின் கட்டளை அதிகாரி கே.பி.டி.ஐ மதுஷானிக்கு வழங்கப்பட்டன. அதிகாரி கெடட் அதிகாரி பயிற்சி இலக் 59 தொண்டர்) முதல்-வரிசைக்கு வெற்றி கின்னம் மற்றும் அதிகாரிக்குறிய கெளரவ வாள் கெடட் அதிகாரி பி.டி.டி.ஆர்.எல் புல்லபெருமாவா மற்றும் கெடட் அதிகாரி கே.எம்.ஜி.டி.பி காங்காரவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தொண்டர் கெடட் அதிகாரி பாடநெறி எண் 16 மிகச் சிறந்த அதிகாரிக்கான கின்னம் மற்றும் கெளரவ வாள் கெடட் சார்ஜென்ட் ஜே.பி.டி ரன்மாலிக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி அவர்களால் இந்த பயிற்சியில் சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கொரவிக்கப்பட்டன.

மேலும் இலங்கை இராணுவ பயிற்சி முகாமில் அவர்கள் இருந்த காலங்களில் கெடட் அறிவியல் தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் இராணுவ பயிற்சி முகாம்மில் உடற்பயிற்சி கூடத்தில் வைத்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்களால் தங்கள் அன்புக்குரிய மகன்களின் தோள்களில் ஜனாதிபதி அதிகார சின்னங்களை சூடப்பட்டன, இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மற்றும் பிரதான அதிதியாக கலந்துகொண்ட பிரதமர், இராணுவ பயிற்சி முகாமின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ்.கே. ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டன.

இதனையடுத்து, இலங்கை இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக நியமிக்கப்பட்ட கெடட் அதிகாரிகளுக்கு 'அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் இராணுவத் தளபதியும், இலங்கை இராணுவ வணிகக் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை வாழ்த்துவதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஒரு பெரும் திரலானோர் கலந்து கொண்டன. |