கட்டார் தேசிய நாளிற்கான நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

19th December 2019

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் புதன் கிழமை (18) ஒழுங்கு செய்யப்பட்ட கட்டார் தேசிய நாளிற்கான நிகழ்வுகளை முன்னிட்டு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரும் இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவியுமனா திருமதி சுஜீவா நெல்சன் போன்றோர்; கலந்து கொண்டனர்.

இதன் போது கட்டார் தூதரகத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியான திரு ஹலிட் சலி அல் - மாரி அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்களை மற்றும் அவரது பாரியார் போன்றோரை வரவேற்றதுடன் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந் நிகழ்வில் கடற் படைத் தளபதியான வைஸ் அட்மிரால் பியால் டி சில்வா அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர். |