உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சுகமான இராணுவம் மற்றும் சுகமான தேசம் எனும் திட்டத்தினால் கருத்தரங்கு

15th November 2019

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சுகமான இராணுவம் மற்றும் சுகமான தேசம் எனும் கொழும்பில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையின் திட்டதிற்கு நோயாளிகள் மற்றும் இக் கல்லூரியன் அதிகாரிகள் போன்றோருக்கு இவ் வைத்தியசாலையில் கடந்த வியாழக் கிழமை (14) இடம் பெற்றது.

இத் திட்டத்தின் மூலம் நீரிழிவு போன்ற நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பான போஸ்டர்கள் திரையிடுவதற்கான காணொலிகள் உணவு பழக்கமுறை தொடர்பாக வழிகாட்டுதல்கள் உடற்பயிற்சி மற்றும் வைத்திய சிகிச்சை முறைகள் தொடர்பான பல விடயங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கானது பல வைத்திய அதிகாரிகள் போன்றவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் சுகமான இராணுவம் மற்றும் சுகமான தேசம் எனும் திட்டமானது பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்களின் தலைமையில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இவ் வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சுகாதார சேவைப் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் இராணுவ வைத்தியசாலையின் பராமரிப்பு பணிப்பாளர் உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இக் கருத்தரங்கில் உளநல நிபுணரான பிரிகேயடிர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன உளநல நிபுணரான லெப்டினன்ட் கேர்ணல் (வைத்தியர்) கே ஜி என் யூ ஜயசிங்க உளநல நிபுணரான (வைத்தியர்) டீ எஸ் ஹெய்யந்தொடுவ மற்றும் போசனைவள திரு. என் எம் எஸ் ஹெட்டிகெதர போன்றோர் ஒன்றினைந்து விரிவுரையை நிகழ்த்தினர். |