புதிய தலைமையக முதல் அமர்வில் இராணுவ தளபதி பயிற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்

14th November 2019

ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள புதிய இராணுவ தலைமையக இராணுவ தளபதி பணிமனை திறப்பு விழாவானது இம் மாதம் இராணுவ தளபதி அவர்களினால் (14) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் தலைமையக அமர்வானது பயிற்சி நிலையங்களிலுள்ள இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இதன் போது இராணுவ தளபதியவர்கள் பயிற்சிகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடினர்.

இராணுவ பயிற்சி நிலையங்களான இலங்கை இராணுவ எகடமி, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, இராணுவ அதிகாரி துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் உயரதிகாரிகள் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர். |