ஆசியா பரா படகோட்டி போட்டியில் இராணுவ வீரன் வெள்ளி பதக்கம் பெறுகை
13th November 2019
விஷேட படையணியைச் சேர்ந்த சாஜன் J.A.M.P ஜயக்கொடி அவர்கள் தென் கொரியா சியோன்கியூ நகரில் இடம்பெற்ற ஆசியா பரா படகோட்டி 2019 ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டு இலங்கை இராணுவத்திற்கு நற்பெயரை பெற்றுத்தந்திருந்தார்.
இவர் இம் மாதம் 13 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்களினால் இந்த இராணுவ வீரன் வரவேற்கப்பட்டு இவர் ஆற்றிய திறமையை கௌரவிக்கும் முகமாக இராணுவ தளபதி அவர்கள் இந்த விளையாட்டு வீரனை பாராட்டி நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.
இந்த மாற்றுத்திறனாளியான சாஜன் J.A.M.P ஜயக்கொடி அவர்கள் 2009 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பங்கேற்றி அவயங்களை இழந்த மாற்றுத்திறனாளியான படை வீரர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இராணுவ வீரர் இராணுவ தளபதியை சந்தித்த சமயத்தில் இவருடன் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் நிஷாந்த வடுகொடபிடிய, விஷேட படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் நிஷ்சங்க ஈரியகம மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் இணைந்திருந்தனர். |